சுடச்சுட

  

  மாவட்டத்தில் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.
  வழக்கமாக தற்போது மழை பெய்ய வேண்டிய நிலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் விவசாயிகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பயிர்களின் நுனிப்பகுதி கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
   அதிக பனிப்பொழிவு காரணமாக அதிகாலையில் வெளியே செல்லும் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் மிகுந்த பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
  வாகன ஓட்டிகள் அதிகாலை முதல் சூரிய வெளிச்சம் வரும் வரை வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய வீட்டபடி செல்கின்றனர். அதேபோல் இரவு 8 மணிக்கு மேலாக பனிப்பொழிவு இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தங்களது காதுகளை துணிகளால் மூடியபடியே செல்கின்றனர்.
  வழக்கத்துக்கு அதிகமான பனிப்பொழிவு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைய பாதித்து வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai