சுடச்சுட

  

  பெண்ணாடம் அடுத்த இறையூர் கிராமம் கீழ்பாதியில் உள்ள திரெளபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
  முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. இரவில் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி, பூரணாதி நடைபெற்றது.
  சனிக்கிழமை காலை புதிய சிலைகளுக்கு கண் திறந்தல், இராண்டாம், மூன்றாம் கால பூஜைகளும், மருந்து சாத்தும் நிழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகளுடன்
  கும்பாபிஷேக விழா தொடங்கியது.
  சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட கடத்தினை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கோயில் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர்களுக்கும்
  புனிதநீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து சிறப்புப் பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது.  விழாவில் பெண்ணாடம் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai