சுடச்சுட

  

  உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை அமைப்பு சார்பில், "தன் சுத்தம் மற்றும் ஆரோக்கியம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கான இக்கருத்தரங்கில், திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். கலைப்புல முதல்வர் எம்.நாகராஜன் தொடக்கவுரையாற்றினார். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ கண்காணிப்பாளர் செல்வ.முத்துக்குமரன் முன்னிலை வகித்துப் பேசினார்.
   ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெயகௌரி சுபாஷ், துணை முதல்வர் கரோலின் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று தன் சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் பேசினர்.
   நெறிமுறை அலுவலர் குலசேகரபெருமாள், இளையோர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
  இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் சரவணன், ரேணுகா, சசிரேகா, அன்புமலர், கலை ஆகியோர் பங்கேற்று பேசினர்.  திட்ட அலுவலர் பி.சசிரேகா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai