Enable Javscript for better performance
ஓய்வூதியர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

    By DIN  |   Published on : 05th December 2016 04:53 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
    மாவட்டத் தலைவர் ந.பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்தானராஜ், இளங்கோமணி, சந்திரசேகரன், மணி, கலியபெருமாள், லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     கூட்டத்தில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி வழங்கியதுபோல் தமிழக ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படியினை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியது போல் மாநில அரசின் பணியாளர்களுக்கும் உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     முன்னதாக மாவட்டச் செயலர் த.கண்ணன் வரவேற்க, நிர்வாகி சண்முகம் நன்றி கூறினார்.

    kattana sevai