சுடச்சுட

  

  புவனகிரி வட்டம், பூவாலை ஊராட்சியில் போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகுவதால் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
  பூவாலை ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள், ரா.தமிழ்வளவன் தலைமையில் அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
  அந்த மனுவில், பூவாலை கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா பருவத்தில் நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் போதிய மழையும் பெய்யவில்லை. பூவாலை ஊராட்சி கடைமடைப்
  பகுதி என்பதால் வாய்க்காலில் தண்ணீரும் வரவில்லை. இதனால் தற்போது நிலங்கள் வறண்டு நெற்பயிர்கள் கருகும் நிலைக்குச் சென்றுள்ளன.
   எனவே பூவாலை கிராமத்தை வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும். இப்பயிர்களுக்கு பிரதமரின் புதிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai