சுடச்சுட

  

  ஆட்சியர் உத்தரவின் பேரில், கடலூர் குறிஞ்சிநகர் பகுதியில் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  கடலூரில் புதிய ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள செம்மண்டலம் முதல் பட்டாம்பாக்கம் வரை சுங்கச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுங்கச் சாலை அருகே ஏற்கெனவே இருந்த பழைய வடிகால் மற்றும் புதிய வடிகால்களை இணைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அவை முறையாகப் பராமரிக்கப்படாததைத் தொடர்ந்து, இணைப்புக் கால்வாயில் மணல்மேடிட்டதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
   இதுகுறித்து குறிஞ்சி நகர்நலச் சங்கச் செயலர் டி.பி.புருஷோத்தமன் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து புதிய வடிகாலையும் பழைய வடிகாலையும் இணைக்கும் இடத்தில் உள்ள தடுப்புகளை நீக்குவதற்கு ஆட்சியர் த.பொ.ராஜேஷ் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த
  2 நாள்களாக இப்பணி நடைபெற்றது.
   இதுகுறித்து டி.பி.புருஷோத்தமன் கூறுகையில், கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் மற்றப் பகுதிகளில் உள்ள அடைப்புகளையும்
  உடனடியாக அகற்றி, தண்ணீர் முழுமையாகச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai