Enable Javscript for better performance
கிணற்றில் விழுந்த விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

    By DIN  |   Published on : 05th December 2016 04:51 AM  |   அ+அ அ-   |    |  

    கிணற்றில் விழுந்த விவசாயி உயிரிழந்தார்.

    புதுப்பேட்டை அருகே உள்ள கே.வரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சு.பாண்டியன் (54). விவசாயி. இவர் சனிக்கிழமை இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் பின்பகுதிக்குச் சென்றபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அவர் அருகிலிருந்த கிணற்றில் விழுந்துள்ளார்.
     அப்போது அங்கிருந்தவர்கள் பாண்டியனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக அவர் புதுச்சேரியில் சேர்க்கப்பட்டார். அங்கு  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.  இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    kattana sevai