சுடச்சுட

  

  பரங்கிப்பேட்டை ஒன்றியம், சின்னக்காரமேடு
  மற்றும் பெரியகாரமேடு ஆகிய கிராமங்களில் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
  அப்போது கிராமத்துக்கு தேவையான குடிநீர் வசதி குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த எம்எல்ஏ, உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் குடிநீர்ப் பற்றாக்குறையை போக்கிட உடனடி நடவடிக்கையாக 5 இடங்களுக்கான கை பம்புகளை வழங்கினார்.
   அப்போது, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் அசோகன், சிதம்பரம் நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், அவைத் தலைவர் கோ.வி.ராசாங்கம், ஊராட்சி செயலர் தனசிங்கு, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் கர்ணா, நிர்வாகிகள் முத்துக்குமரன், ஜி.வைத்தியநாதன், கார்த்திகேயன், ராமராஜ், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai