சுடச்சுட

  

  விருத்தாசலம் கோட்ட காவல் துறை சார்பில் பாலக்கரையில் விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். விருத்தாசலம் காவல் ஆய்வாளர் ராஜதாமரைப்பாண்டியன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று, வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு வில்லைகள் (ஸ்டிக்கர்) ஒட்டியும், வாகன ஓட்டுநர்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  தொடர்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி சித்தலூர் புறவழிச் சாலை சந்திப்பு, கடலூர் புறவழிச் சாலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
   விபத்துக்களை தடுக்க ராஜேந்திரன்பட்டினம், துறையூர் உள்ளிட்ட 4 இடங்களில் நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  மேலும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் அவசியம் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai