சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் வரும் 11ஆம் தேதி பாரதியாரின் 135ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்றத்தின் மாவட்டத் தலைவர் கடல் நாகராசன் தெரிவித்துள்ளார்.
  அதன்படி, "எனக்குப் பிடித்த பாரதியாரின் பாட்டு' என்ற தலைப்பிட்டு, பிடித்தமான பாரதியாரின் ஒரே ஒரு பாட்டை தேர்வு செய்து, அதன் முதல் 4 வரிகளை மட்டும் எழுதி அப்பாட்டின் சிறப்பு என்ன என்பதை சுருக்கமாக எழுத வேண்டும். இதனை 50 பைசா தபால் அட்டையில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.
   மேலும் எழுதுபவரின் பெயர், வீட்டு முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் வரும் 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
  கவிதையை பாரதிதாசன் இலக்கிய மன்றம், 41, பாவாணர் தெரு, காமராஜர் நகர், ஆல்பேட்டை, கடலூர்-1 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
   பள்ளி மாணவராக இருந்தால் படிக்கும் வகுப்பு மற்றும் பள்ளியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 2 பாடல்களுக்கும், 20 நபர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai