சுடச்சுட

  

  உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கம் சார்பில் குறவன்குப்பம் நியூலைட் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமை சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டன.
  அரிமா சங்கத் தலைவர் சி.லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். சிறப்புப் பள்ளியின் நிறுவனர் சகாயராஜ், அரிமா சங்கச் செயலர் ஆர்.அன்வர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.  அரிமா சங்க நிர்வாகிகள் மன்சூர்அலி, பழனியப்பன், பொருளர் எஸ்.கே.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி ஆசிரியர் சகாயபாக்கியம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai