சுடச்சுட

  

  மீன், இறால் வளர்ப்பதற்கு அரசு மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் மீன்வளத் துறை மூலம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மீன்வள மேலாண்மை மற்றும் நீலப் புரட்சித் திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு கடன் தொகை வழங்கப்படுகிறது.
   இதன்படி நன்னீர் மீன்வளர்ப்பு, உவர்நீர் இறால் வளர்ப்பு, குளங்களில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் மோட்டார் மற்றும் விளக்குகள் ஆகியவற்றை அமைப்பதற்கு ஆகும் செலவுத் தொகை ரூ.15 லட்சத்தில் 50 சதவீதம் ரூ.7.50 லட்சம் மானியத் தொகையாக வழங்கப்படும்.  
  எனவே, மீன், இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் பரங்கிப்பேட்டையில் உள்ள மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04144-243033 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் அதில்
  தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai