சுடச்சுட

  

  முதியவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓய்வுபெற்ற எஸ்ஐ மீது வழக்கு

  By DIN  |   Published on : 05th December 2016 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதியவரை தற்கொலைக்கு தூண்டியதாக  ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.பி.ராஜமாணிக்கம் (64). கடலூர்-புதுவை சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை காலை அப்துல்காதர் நகருக்குச் சென்றவர், அங்கு ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் வீட்டினுள் சென்று தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்தனர்.
   இந்த நிலையில் ராஜமாணிக்கம் எழுதி வைத்திருந்த நாள்குறிப்பில், ராஜேந்திரனிடம் பெற்ற கடனுக்காக தனது கடையின் பத்திரம் மற்றும் வீட்டுமனைப் பத்திரத்தை அடமானமாக வைத்துள்ளதாகவும், கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் பத்திரத்தை அவர் திருப்பித்தரவில்லை என்றும், இதனால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
   நாள்குறிப்பை கைப்பற்றிய போலீஸார், சந்தேக மரணம் என பதிவான வழக்கை மாற்றி, ராஜமாணிக்கத்தை தற்கொலைக்கு
  தூண்டியதாக ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai