சுடச்சுட

    

    பண்ருட்டி, காந்தி சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    உலக நன்மை வேண்டி இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திர தினத்தன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
     அதன்படி, கார்த்திகை மாத திருவோண நட்சத்திர நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. ஆலய பட்டாச்சாரியார் கஸ்தூரி ரங்கன் திருக்கல்யாண வைபவத்தை வேத மந்திரங்கள் முழங்க நடத்தி வைத்தார்.
     ஆலய கைங்கர்ய சபைத் தலைவர் பன்னீர்செல்வம், பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai