சுடச்சுட

  

  பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத 3ஆவது சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
  இக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் சோமவார நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.    திங்கள்கிழமை 3ஆவது சோமவார விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மதியம் 2 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு வீரட்டானேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.  இரவு 8 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் உலா வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai