சுடச்சுட

  

  மாவட்டத்தில் சுமார் 90 சதவீத ஏடிஎம் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
  கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையினால் உயர் மதிப்புகொண்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர்.
  மக்களிடமிருந்த பணம் பெரும்பாலும் வங்கிகளில் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது தங்களது அன்றாடத் தேவைக்காக பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வருகின்றனர். இதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதால் அதிக காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், ஏடிஎம்களில் போதிய பணம் இல்லாததால் அங்கேயும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
   மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமப் புறங்களில் 292 வங்கிக் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் மூலமாக 376 ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு பணம் விநியோகிக்கப்படுகிறது. கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் மாவட்டத்தில் சுமார் 70 சதவீதம் ஏடிஎம்கள் இயங்கவில்லை. தற்போது வங்கிகளில் பணம் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையிலும் ஏடிஎம்கள் முழு நேரமாக இயங்கவில்லை. ஏடிஎம்களில் ரூ.2 ஆயிரம் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. அதுவும் ஒரே நோட்டாக விநியோகிக்கப்படுவதால் சில்லறை கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக புதிய ரூ.500 நோட்டுகளும் மாவட்டத்தில் போதிய அளவில் விநியோகிக்கப்படவில்லை.
   அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் 90 சதவீதத்துக்கும் அதிகமான ஏடிஎம் இயந்திரங்கள் இயங்கவில்லை. ஒருசில அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம்கள் மட்டுமே இயங்கின. அவையும் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் பணம் இல்லாமல் செயல் இழந்தன. இதனால்
  மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai