சுடச்சுட

  

  அண்ணாமலைப் பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்: டிச.9இல் தொடக்கம்

  By DIN  |   Published on : 06th December 2016 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம் டிச.9ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.
  இப் பல்கலை.யின் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (ஙஹழ்ந் நட்ங்ங்ற்) மற்றும் பட்டயச் சான்றிதழ்களை (இர்ய்ஸ்ர்ஸ்ரீஹற்ண்ர்ய்) இன்னும் பெற்றுகொள்ளாமல் தேர்வுத் துறையில் உள்ளன.
  அவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வருகிற டிச.9,10,11 ஆகிய தேதிகளில் அம்மா திட்ட சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகரில் நடைபெற உள்ளது. இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
  சான்றிதழ் பெற வரும் மாணவ, மாணவிகள் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினைச் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
  இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 04144-238027, 237368, 238358 04144-238282, 238248 உஷ் : 578 என்ற தொலைபேசி எண்களிலும், ஹன்ஸ்ரீங்ழ்ற்ண்ள்ல்ப்ஸ்ரீஹம்ல்16ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம்என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai