சுடச்சுட

    

    உலக மண் தினத்தை முன்னிட்டு என்.எல்.சி இந்தியா நிறுவனம் சார்பில் இரண்டாவது சுரங்கம் மற்றும் என்எல்சி நுழைவு வாயில் பகுதியில் திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
    சுற்றுச்சூழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக என்எல்சி இந்தியா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினம், வன தினம், மண் தினம் போன்ற விழாக்களை கொண்டாடி வருகிறது.
    அதன்படி உலக மண் தினத்தை முன்னிட்டு 2ஆவது சுரங்க மண் கொட்டும் இடத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுரங்கத் துறை இயக்குநர் சுபீர்தாஸ் மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
    சிறப்பு சுரங்க இயந்திரங்கள் துறைச் செயல் இயக்குநர் வி.ரங்கநாதன், உயர் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், சுமார் 6 ஏக்கர் பரப்பில் மா, நாவல், கொய்யா, நெல்லிக்காய், கொடுக்காப்புளி போன்ற 900 மரக்கன்றுகள் நடப்பட்டன.
    இதேபோல், நெய்வேலி நுழைவு வாயில் வளாகத்தில் என்எல்சி இந்தியா நிறுவன தோட்டக்கலை சார்பில் நடைபெற்ற விழாவில், நிறுவனத்தின் நகர நிர்வாகத் துறை செயல் இயக்குநர் எஸ்.ஸ்ரீதர் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார்.
    இதனை தொடர்ந்து, நெய்வேலி நுழைவு வாயிலின் அருகே உள்ள பி-பிளாக் மாற்றுக் குடியிருப்பு, நெய்வேலி விமான நிலையம், வடக்கு மேலூர், நகரியம்-மந்தாரக்குப்பம் இணைப்புச் சாலை பகுதிகளில் சுமார் 61 ஏக்கர் பரப்பில் செம்மரம், புங்கன், மகாகனி, சிசு போன்ற சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர்.
    உறுதிமொழி: முன்னதாக, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனைத்து தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்
    களில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண்ணின் வளத்தினை பாதுகாப்போம், பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிக்க மாட்டோம். ரசாயன உரங்களை தவிர்ப்போம். மரம்-செடிகளை வளர்ப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai