சுடச்சுட

  

  குறைதீர் நாள் கூட்டம்: குறைந்தளவில் மக்கள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 06th December 2016 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பங்கேற்றனர்.
  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 220 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு ஆட்சியர் நேரில் சென்று மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
  பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குள்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
  வழக்கமாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் 400 முதல் 450 மனுக்கள் வரை பதிவாகும். ஆனால் இந்த எண்ணிக்கையில் பாதி அளவுக்கே திங்கள்கிழமை மனுக்கள் வரப்பெற்றன.
  முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் மனு அளிக்க மக்கள் போதிய அளவில் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) எஸ்.கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கு.மதிவாணன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கலும் கலந்து கொண்டனர்.
  இலவசமாக மனு எழுதும் வசதி
  மாவட்ட ஆட்சியரகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்கள் எழுதித் தரும் பணியில் மாவட்ட நேரு இளையோர் மையத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூடுதலாக மகளிர் திட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினரும் இப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
  எனவே, பொதுமக்கள் வெளியில் பணம் கொடுத்து மனுக்களை எழுதிப்பெறாமல், இலவசமாக அளிக்கப்படும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai