சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் வரும் 15ஆம் தேதி இளைஞர்கள் பங்குபெறும் வட்ட மற்றும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கலாம்.
  போட்டியில் தேசப்பற்றும், தேசிய வளர்ச்சியும் என்ற தலைப்பில் பேச வேண்டும். 18 முதல் 29 வயதுள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே 5 நிமிடங்கள் உரையாற்ற வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.2,000, ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் நபர் மாநில அளவில் பங்கேற்று, தேசிய அளவிலான போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் வீதம் பரிசு வழங்கப்படும்.
  போட்டிகள் கடலூர் புதுப்பாளையம் சக்கரை கிராமணித்தெருவிலுள்ள நேரு இளையோர் மையத்தில் நடைபெறுகிறது என மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் மா.ஹெலன்ராணி தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai