சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் கல்வீச்சில் 3 பேருந்துகள் சேதமடைந்தன.
  முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து திங்கள்கிழமை இரவு பெண்ணாடம் அருகே கொடிக்களம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது சிலர் பேருந்தின் மீது கல்வீசியதில் பின்பக்க கண்ணாடி சேதமடைந்தது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து ஆவினங்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  இதேபோல் விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஆவினங்குடி அருகே சென்றபோது சிலர் கல்வீசித் தாக்கியதில் முன்புறக் கண்ணாடி உடைந்தது. மேலும், பண்ருட்டியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நெல்லிக்குப்பம் அருகே சிலர் கல்வீசித் தாக்கியதில் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai