சுடச்சுட

  

  முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து மக்கள் வீடுகளில் முடங்கியதால் கடலூர் மாவட்டம் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.
  உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு காலமானார்.
  இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் முன்பே, முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல் பரவியதால் வணிக நிறுவனங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் திங்கள்கிழமை மாலையில் மூடப்பட்டன. மேலும், அரசு, தனியார் பேருந்துகள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டன.
  இதனால், கடலூர் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவில் காத்திருந்தவர்களுக்கு மாவட்ட காவல் துறை, வருவாய்த் துறையினர் இணைந்து பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டப் பேருந்துகள் இயக்கம் முற்றிலுமாகத் தடைபட்டது. இந்நிலையில் முதல்வரின் மறைவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அனைத்து வாகனப் போக்குவரத்துகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. பேருந்துகள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் நடுவழியில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.
  மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. மருந்தகங்களும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு, தனியார் பேருந்துகள் இயக்கமும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. அதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து பேருந்து நிலையங்களும் இயல்பு நிலைக்கு மாறாக வெறிச்சோடிக் கிடந்தன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai