சுடச்சுட

    

    குள்ளஞ்சாவடியில் கடை மற்றும் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் திருடப்பட்டன.
     கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதானங்கும்பம் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செüந்தரபாண்டியன் (39). இவர், கடந்த மாதம் 14-ஆம் தேதி தனது பைக்கை, குள்ளஞ்சாவடி கடை வீதியில் உள்ள அரசு வங்கி அருகே நிறுத்திவிட்டு பொருள்கள் வாங்கச் சென்றாராம்.
     திரும்பி வந்து பார்த்தபோது வண்டியைக் காணவில்லையாம்.
     இதேபோன்று, குள்ளஞ்சாவடி, புதுத் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (38). கடந்த மாதம் 20-ஆம் தேதி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது பைக்கை காணவில்லையாம்.
     இவ்விரு புகார்களின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
     
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai