சுடச்சுட

    

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்துக்கு வர்த்தகர்கள் மற்றும் தமிழ்ச் சங்கத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
     குமராட்சி பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி.தமிழ் தலைமையில், கௌரவத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு. மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மெüன ஊர்வலம் சென்றனர்.
     பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், கெüரவத் தலைவர் வைரக்கண்ணு, தலைவர் சுந்தர பழனியப்பன், செயலர் முத்துக்குமார், பொருளர் ராஜா, ஆலோசகர் அசோக்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai