சுடச்சுட

  

  ஜெயலலிதா உருவபொம்மைக்கு கிராம மக்கள் அஞ்சலி

  By நெய்வேலி,  |   Published on : 08th December 2016 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திட்டக்குடி அருகே ஜெயலலிதாவின் உருவபொம்மைக்கு கிராம மக்கள் இறுதிச் சடங்கு நடத்தினர்.
   ஜெயலலிதா மறைவையொட்டி அவரது உருவப்படத்தை அலங்கரித்து மாவட்டம் முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   பண்ருட்டி நகராட்சி 33 வார்டுகள், அண்ணாகிராமம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் மற்றும் பண்ருட்டி ஒன்றியப் பகுதிகளில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
   திட்டக்குடி அடுத்த புலிவலம் கிராம மக்கள் ஜெயலலிதாவின் உருவபொம்மை செய்து, மாலை அணிவித்து, வாழை மரம் கட்டி பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
   பின்னர், உருவபொம்மையை சவ ஊர்வலமாக எடுத்துச் சென்று மயானத்தில் எரியூட்டினர்.
   120 பேர் மொட்டை அடிப்பு
   தொடர்ந்து ஆவட்டி, புலிவலம், பாசார் கிராமங்களைச் சேர்ந்த 120 பேர் மொட்டை அடித்து தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.
   பண்ருட்டி அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலர் மோகனகிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலர் சி.ராஜேந்திரன் முன்னிலையில், பண்ருட்டி மளிகை வியாபாரிகள் சங்கச் செயலர் ஜெயமூர்த்தி, மருந்து வணிகர்கள் சங்கச் செயலர் தியாகராஜன், உணவுப்பொருள் வணிக சங்கத் தலைவர் செல்வராஜ் ஆகியோர், பண்ருட்டி பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
   அரசு ஓய்வூதியர்கள்...
   கடலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடத்தினர்.
   மாவட்டத் தலைவர் சி.குழந்தைவேலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன், இணைச் செயலர் எஸ்.கருணாகரன், கோ.ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலர் டி.புருஷோத்தமன் புகழஞ்சலி உரையாற்றினார். இதேபோல, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில், மாவட்டத் தலைவர் சி.மச்சேந்திரன், செயலர் எஸ்.ரெங்கசாமி ஆகியோர் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai