Enable Javscript for better performance
தனியார் மின் நிலையத்தில் முறையான ஊதியம் வழங்க வேண்டும்: மின் ஊழியர் மத்திய அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் மின் நிலையத்தில் முறையான ஊதியம் வழங்க வேண்டும்: மின் ஊழியர் மத்திய அமைப்பு

    By நெய்வேலி  |   Published on : 08th December 2016 08:53 AM  |   அ+அ அ-   |    |  

    தனியார் மின் நிலைய ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி முறையான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
     தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்திக்கின்ற பிரச்னைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு எம்.கலைச்செல்வன் (நாகை) தலைமை வகித்தார். மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநில பொதுச்செயலர் எஸ்.ராஜேந்திரன், துணை பொதுச்செயலர் டி.ஜெயசங்கர், மண்டல செயலர் டி.பழனிவேலு, மாநிலச் செயலர்கள் ஆர்.ரவிக்குமார், எஸ்.அப்பாதுரை மற்றும் மாவட்ட சி.ஐ.டி.யூ. செயலர் பி.கருப்பையன், துணைத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள தனியார் மின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர் மற்றும் தொழிலாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும். மின் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவகம், ஓய்வறை, அடையாள அட்டை, வருகைப் பதிவேடு மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai