சுடச்சுட

  

  நெய்வேலியில் அம்பேத்கர் நினைவு தினம் கடைப்பிடிப்பு

  By நெய்வேலி,  |   Published on : 08th December 2016 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெய்வேலி, என்.எல்.சி. நிறுவன எஸ்.சி., எஸ்.டி., நலச்சங்கம் சார்பில், டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
   நெய்வேலி, அம்பேத்கர் சதுக்கத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு, எஸ்.சி., எஸ்.டி., நலச் சங்க முன்னாள் தலைவர் அன்பழகன், பொருளர் பாலாஜி, தொமுச முன்னாள் துணைத் தலைவர் கலைச்செல்வன், முன்னாள் நலச் சங்க பொறுப்பாளர்கள் மாயவன், அறிவுடைநம்பிமான், சுரேஷ்குமார், புஷ்பராஜ், பரமசிவம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் மணிவேந்தன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
   இதேபோல, மத்திய அரசின் யுனைடெட் நிறுவனத்தின் சார்பில் கோட்ட மேலாளர் சந்திரசேகரன், கிளை மேலாளர் கிள்ளிவளவன், ஊழியர்கள் தர்மலிங்கம், சிவராமகிருஷ்ணசாய், ராகுல், கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai