சுடச்சுட

  

  மந்தாரக்குப்பத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
   நெய்வேலி அடுத்துள்ள மந்தாரக்குப்பம், நான்கு முனைச் சந்திப்பு சாலையில் வசிப்பவர் பெலிக்ஸ்நாதன் (48). தையல் தொழிலாளி. இவரது மனைவி திங்கள்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
   அப்போது, அங்கு வந்த ரைஸ் மில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (31) தகாத முறையில் நடந்து கொண்டு தாக்கினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai