சுடச்சுட

  

  ஜெயலலிதா மறைவையொட்டி நெய்வேலி நகரிய அதிமுகவினர் வியாழக்கிழமை மொன ஊர்வலம் நடத்தினர்.
   நெய்வேலி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தில், அதிமுக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் வியாழக்கிழமை மாலை கூடினர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
   பின்னர், அங்கிருந்து நெய்வேலி நகரச் செயலர் கோவிந்தராஜ் தலைமையில் ஊர்வலம் தொடங்கியது. முன்னாள் எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைத் தலைவர் ஆர்.ராஜசேகர், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கச் செயலர் ராம.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் அவைத் தலைவர் வெற்றி வேல், பொருளர் செல்வராஜ், தொழிற்சங்கத் தலைவர் அபு, பொருளர் தேவானந்தன், அலுவலகச் செயலர் அல்போன்ஸ், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கஞ்சமலை, ராமலிங்கம், கர்லின், ராஜாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   நெய்வேலி, வட்டம் 9இல் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு சிலர் மாலை அணிவித்து, மொட்டையடித்து தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai