சுடச்சுட

    

    குடிநீர் விநியோகம் சீரமைப்புப் பணி: நெய்வேலி எம்எல்ஏ ஆய்வு

    By நெய்வேலி,  |   Published on : 09th December 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தாண்டிக்குப்பத்தில் குடிநீர் விநியோக சீரமைப்புப் பணியை எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.
     நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட முத்தாண்டிக்குப்பத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
     இப்பகுதி மக்களுக்கு, கடைவீதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் பழுதானதால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர். குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டுமென தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
     இதையடுத்து எம்எல்ஏ நடவடிக்கை எடுத்து, பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பரிந்துரை செய்தார். பின்பு மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டு, மின்மோட்டாரில் பழுது நீக்கம் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
     ஆய்வின்போது, மாவட்டப் பிரதிநிதி ஞானமணி, ஊராட்சி செயலர் மணிவண்ணன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai