சுடச்சுட

    

    சாலை மறியல் வழக்கு: ஜி.கே.மணி உள்பட 6 பேர் விடுதலை

    By கடலூர்,  |   Published on : 09th December 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலை மறியல் தொடர்பான வழக்கிலிருந்து பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 6 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
     கடந்த 2013ஆம் ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்துக்குள் பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஆகியோர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்தும், தடையை நீக்கக்கோரியும் பாமகவினர் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் சென்றனர். அப்போது கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைத் தலைவர் பழ.தாமரைக்கண்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.வேலு, நிர்வாகிகள் தன்ராஜ், கோவிந்தசாமி, புதுவை மாநில அரசுக் கொறடாவும், அப்போதைய பாமக நிர்வாகியுமான அனந்தராமன் உள்ளிட்டோர் ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஜி.கே.மணி உள்ளிட்ட 6 பேர் மீதும் கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கடலூர் நீதித் துறை நடுவர் எண்-2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ரமேஷ் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், ஜி.கே.மணி உள்ளிட்ட 6 பேரையும் விடுவித்தும், வழக்கினை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai