சுடச்சுட

  

  கடலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலர் கே.அனுசுயா தலைமை வகித்தார். கூட்டத்தில், பொது சுகாதாரத் துறையில் இளம் பெண்களுக்கு நாப்கின் வழங்கும் திட்டம், பிரசவித்தவர்களுக்கு ஆரோக்கிய பிரசவ பெட்டகம், மகப்பேறு உதவித் தொகையை உயர்த்தியது, முதல்வர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டத் திட்டங்களை தீட்டியும், பள்ளி சுகாதாரத் திட்டத்தை விரிவுபடுத்தியும் நடவடிக்கை எடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஆர்.இந்திரா, நிர்வாகி என்.சகுந்தலா, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.முத்தமிழ்ச்செல்வி, கே.ஜோதி, சி.அஞ்சலைதேவி, ஏ.அலுமேலு, எஸ்.சர்புன்னிசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai