சுடச்சுட

    

    பண்ருட்டியில் தொடரும் வாகன நெரிசல்: பொதுமக்கள் அவதி

    By நெய்வேலி,  |   Published on : 09th December 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி நகரில் தொடரும் வாகன நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
     கடலூர் மாவட்டத்தில் வியாபார முக்கியத்துவம் பெற்ற நகரமாக பண்ருட்டி திகழ்கிறது. இங்குள்ள கடைகளில் பொருள்கள் வாங்குவதற்காக நாள்தோறும் உள்ளூர், சுற்றுவட்டாரக் கிராம மக்கள் திரளானோர் வந்து செல்கின்றனர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும், கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் நகரில் கூட்ட நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
     சாலை ஆக்கிரமிப்புகளானது வாகன நெரிசலை மேலும் அதிகரிக்கின்றது. கடை வீதியில் உள்ள சில கடைகளின் உரிமையாளர்கள், தரை மற்றும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
     மேலும், சரக்கு வாகனங்கள் கடை வீதியில் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டு சரக்குகளை ஏற்றி இறக்குவதால் நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
     குறிப்பாக, ராஜாஜி சாலை, காந்தி சாலை, சென்னை-கும்பகோணம் சாலை, கடலூர் சாலைகளில் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அங்காங்கே சீரற்ற முறையில் வானங்கள் நிறுத்தப்படுகின்றன.
     பண்ருட்டி நகரில் போக்குவரத்து போலீஸார் பணியில் இருந்தபோதும், வாகன நெரிசல் குறைந்தபாடில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai