சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே பாம்பு கடித்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளி, புதன்கிழமை உயிரிழந்தார்.
     பண்ருட்டி ஒன்றியம், எல்.எல்.புரம் ஊராட்சி, உசேன் நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் பசுபதி. கூலித் தொழிலாளி. இவர் கடந்த டிச.2ஆம் தேதி வீட்டு தோட்டத்துக்குச் சென்றபோது அவரை பாம்பு கடித்துவிட்டது. இதையடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனையிர் சேர்க்கப்பட்டார். பின்பு தீவிர சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பசுபதி உயிரிழந்தார்.அவருக்கு கர்ப்பிணி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவம் குறித்து, பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai