சுடச்சுட

  

  வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டும் மாவட்டத்தில் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை.
   கடலூர் மாவட்டத்துக்கு அதிக மழைப் பொழிவை பெற்றுத்தரும் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அண்மையில் வங்கக் கடலில் உருவான நடா புயலானது வலுவிழந்த நிலையில் கடலூர் மாவட்டம் அருகே கரையை கடந்த போதும் மாவட்டத்தில் போதுமான மழை பெய்யவில்லை. பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருவதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கருதப்படுகிறது.
   இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயலால் போதுமான மழையை கடலூர் மாவட்டம் பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டும் மாவட்டத்தில் போதுமான மழை பெய்யவில்லை.
   வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சேத்தியாத்தோப்பில் 3 மி.மீ. மழையும், கடலூர், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டையில் தலா 2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இருப்பினும் வர்தா புயல் போதிய அளவு மழையை தருமென விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai