சுடச்சுட

  

  மாவட்டத்தில் 67,795 பேர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்

  By கடலூர்,  |   Published on : 09th December 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மார்ச் மாதம் தொடங்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வினை கடலூர் மாவட்டத்தில் 67,795 பேர் எழுதுகின்றனர். அவர்களது பெயர்களை பதிவேற்றம் செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.
   தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் பட்டியல் பள்ளிகள்தோறும் கோரப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டன.
   பின்னர் மாணவ, மாணவிகளின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் வியாழக்கிழமை நிறைவு பெற்றதாக முதன்மைக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி பிளஸ்-2 பொதுத் தேர்வினை 202 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 31,525 பேர் எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 410 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 36,270 பேர் எழுதுகின்றனர். இதில் கடலூர் கல்வி மாவட்டத்திலிருந்து 23,893 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்திலிருந்து 12,377 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 54, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 29 மையங்களும் அமைக்கப்படுகின்றன.
   பொதுத்தேர்வு எழுதும் 67,795 மாணவ, மாணவிகளின் பெயர், அவர்களின் பிறந்த தேதி ஆகியவை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக தேர்வு முடிவுகளை எளிதில் அறிந்துகொள்ள முடியும். மேலும், இப்பதிவின் அடிப்படையில் தான் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai