சுடச்சுட

  

  வீட்டு மனையில் திருமண மண்டபம் கட்டத் தடை: ஆட்சியர் உத்தரவு

  By நெய்வேலி  |   Published on : 09th December 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காந்தி கிராமத்தில் வீட்டு மனையில், திருமண மண்டபம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
   அந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, காந்தி கிராமத்தில் புதிய சர்வே எண் 164.10இல் நகர ஊரமைப்புத் துறையினரால் வீட்டுமனை வகைப்பாட்டில் அனுமதி வழங்கப்பட்ட மனை எண் 180 மற்றும் 181 ஆகிய இரு மனைப் பிரிவுகளில், நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்த நாகலிங்கம் மனைவி மங்கையர்கரசி திருமண மண்டபம் கட்டி வருவது விசாரணையில் தெரியவருகிறது.
   மேற்படி மனைப் பிரிவுகளானது வடக்குத்து ஊராட்சியில் வீடு கட்டி பயன்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட மனைகளாகும். இதில், திருமண மண்டபம் கட்டுவது என்பது, நகர ஊரமைப்புத் துறையின் சட்டத்தினை மீறிய செயலாக உள்ளது.
   இது தொடர்பாக, வடக்குத்து ஊராட்சி மன்றத்தால் 27.6.2016 அன்று நிறைவேற்றப்பட்ட ஊராட்சி தீர்மானம் (எண்: 042016-17) மற்றும் 8.9.2016 அன்று ஊராட்சியால் வழங்கப்பட்ட ஊராட்சி கட்டட அனுமதியும் ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது. மனைப் பிரிவுகளில் மனையின் உரிமதாரர், பணியினை தொடர்ந்து மேற்கொள்ள தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
   மனைப்பிரிவின் உரிமதாரர், வீட்டுமனை வகைபாடுடைய மனைப் பிரிவினை வணிக நோக்கத்திலான மனைப் பிரிவாக நகர ஊரமைப்பு துறையினரிடம் முறையாக மாற்றம் செய்து, அனுமதி பெறப்பட்ட பின்னரே பணியினை மேற்கொள்ளலாம் என அந்த உத்தரவில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai