சுடச்சுட

  

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சியினர், பொதுமக்கள், அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. மௌன ஊர்வலமும் நடைபெற்றது.
   அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமாக செயல்பட்ட ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு கடலூர் நகர அதிமுக, வர்த்தகர் சங்கம், பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
   கடலூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய மௌன ஊர்வலத்துக்கு, நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமை வகித்தார். அண்ணா பாலம், பாரதிசாலை வழியாகச் சென்ற ஊர்வலம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவுபெற்றது. அங்கு முதல்வரின் முழுஉருவப் படத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன், மருத்துவரணி மாநில துணைச் செயலர் எஸ்.பி.கே.சீனுவாசராஜா, மாவட்ட துணைச் செயலர் கே.முருகுமணி, விவசாய அணிச் செயலர் என்.காசிநாதன், மீனரணிச் செயலர் தங்கமணி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
   ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் வ.கந்தன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெ.அன்பு, ஆர்.வி.மணி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் டி.ரவிச்சந்திரன், வர்த்தக சங்க நிர்வாகிகள் ராஜகோபால், சேகர், பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   மீனவர்கள் ஊர்வலம்: மீனவப் பெண்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.
   தேவனாம்பட்டினம் மீன்சந்தையில் தொடங்கிய ஊர்வலம், கடற்கரைச் சாலை, வண்ணாரப்பாளையம், புதுப்பாளையம், அண்ணாமேம்பாலம் வழியாகச் சென்று திருப்பாதிரிபுலியூர் மீன்சந்தையில் நிறைவுற்றது. அங்கு ஜெயலலிதா உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
   பெண்ணாடம்: பெண்ணாடம் நகர அதிமுக மகளிர் அணி சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, மூன்றாம் நாள் துக்கம் அனுசரித்து உணவு, இனிப்பு, காரம், பழவகைகள் படையலிடப்பட்டன.
   கருக்குழித்தோப்பில் நரிக்குறவர்கள் ஜெயலலிதா படத்துக்கு மலர் அலங்காரம் செய்து அஞ்சலி செலுத்தினர். செவ்வேரி காலனியில் பொதுமக்கள், கட்சியினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளைச் செயலர் கலியமூர்த்தி, மேலவைப் பிரதிநிதி சுப்ரமணி, நிர்வாகிகள் வீரமுத்து, பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   காடாம்புலியூர்: இதேபோல் காடாம்புலியூரில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை மொளன ஊர்வலம் நடத்தினர். மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கி.தேவநாதன் தலைமை வகித்தார். அக்ரோ தலைவர் கருணாநிதி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர்கள் ஜோதிபழனி, இந்திரா வடிவேல், புருஷோத்தமன், ஏழுமலை, தங்கமணி குணசேகரன், ராஜேந்திரன், கம்சலிங்கம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் சரவணன், ஒன்றிய இணைச் செயலர் மாணிக்கவேல், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், சரவணன், ஒன்றியப் பொருளர் சந்தானம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் ராமதாஸ், ராதாகிருஷ்ணன், சின்னராசு, குருநாதன், செந்தில், தஷ்ணாமூர்த்தி, இளங்கோவன், ராமதாஸ், ரகுராமன், சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
   முன்னதாக, ஆர்.கே.அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய மெüன ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காடாம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே முடிவடைந்தது. அங்கு ஜெயலலிதா படத்துக்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai