சுடச்சுட

  

  என்எல்சி இந்தியா மனிதவளத் துறை புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

  By நெய்வேலி,  |   Published on : 10th December 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை புதிய இயக்குநராக ஆர்.விக்ரமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

   இந்த நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநராக செயல்பட்டு வந்த சரத்குமார் ஆச்சார்யா, நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, மனிதவளத் துறையில் தலைமைப் பொது மேலாளராகப் பணியாற்றி வந்த ஆர்.விக்ரமனை, மனிதவளத் துறை இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
   ஆர்.விக்ரமன், காரைக்குடி அழகப்பா செட்டியார் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். வர்த்தக மேலாண்மைத் துறையில் பட்ட மேற்படிப்பு பயின்றுள்ளார்.
   நெய்வேலி, என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பயிற்சி அதிகாரியாக தனது பணியைத் தொடங்கியவர், தனது கடின உழைப்பால் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
   இவர், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறைகளில் பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுள்ளார். இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் நடைபெற்ற சிறப்பு தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சியிலும் பங்கேற்றுள்ளார். தேசிய நிர்வாக மேலாண்மை நிலையம் என்ற தொழில் ரீதியிலான அமைப்பின் ஆயுள்கால உறுப்பினராகவும், அந்த அமைப்பின் நெய்வேலி மையத்தின் கெüரவச் செயலராகவும் செயல்பட்டு வருகிறார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai