Enable Javscript for better performance
கறுப்புப் பணம் மீதான பிரதமரின் நடவடிக்கை தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    கறுப்புப் பணம் மீதான பிரதமரின் நடவடிக்கை தோல்வி

    By நெய்வேலி  |   Published on : 10th December 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமான வரித்துறை சோதனைகளில் தொடர்ந்து சிக்கும் பல கோடி மதிப்பிலான புதிய ரூ.2,000 நோட்டுகள், கருப்புப் பணம் மீதான மத்திய அரசின் நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டதையே காட்டுகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
     அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருப்புப் பணத்தை ஒழிக்க, ஏற்கெனவே புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை த.வா.க. வரவேற்றது.
     ஆனால், இதுதொடர்பாக பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்ததால் மக்கள் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். பலர் மாண்டுபோயுள்ளனர். ஆனால், மக்களின் துயர் துடைக்க போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கிராமப்புற பொருளாதாரம், சில்லறை வணிகம், குறுந்தொழில்கள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
     இந்த நிலையில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பெங்களூரில் ரூ.5.7 கோடி, சென்னையில் ரூ.70 கோடிக்கு புதிய ரூ.2,000 நோட்டுகள் சிக்கியுள்ளன. இச்செய்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
     ஒற்றை ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுக்காக தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களும் நடந்தேறுகின்றன. இது பிரதமர் அறிவித்த கருப்புப் பண மீட்பு நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.
     எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai