சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடி தொகுதியில் இன்று குறைகேட்புக் கூட்டம்

    By கடலூர்,  |   Published on : 10th December 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறிஞ்சிப்பாடி தொகுதியில் சனிக்கிழமை (டிச.10) குறைகேட்புக் கூட்டம் நடைபெறுவதாக தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
     அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் குறைகேட்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கருங்குழி, கொளக்குடி, நைனார்குப்பம், மருவாய், அரங்கமங்கலம், கல்குணம், பூதம்பாடி ஆகிய ஊராட்சிகளில் குறை கேட்கப்படுகிறது. மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை குருவப்பன்பேட்டை, வரதராஜன்பேட்டை, மேலபுதுப்பேட்டை, ஆடூர்அகரம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம், சிறுபாளையூர், தீர்த்தனகிரி, ஆதிநாராயணபுரம் ஆகிய ஊராட்சிகளில் மனு பெறப்படுகிறது.
     எனவே, பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகவும், நேரடியாகவும் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai