சுடச்சுட

  

  செல்லிடப்பேசி கோபுரத்தில் பேட்டரி திருட்டு: 3 பேர் கைது

  By கடலூர்,  |   Published on : 10th December 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செல்லிடப்பேசி கோபுரத்தில் பேட்டரி திருடியதாக 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
   கடலூரை அடுத்துள்ள சின்னகாரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ப.சீனிவாசன் (37). தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தில் கோபுரங்கள் பராமரிப்புப் பிரிவின் மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் காடாம்புலியூர் பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக 3 தொழில்நுட்பனர்களை புதன்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
   பின்னர் அப்பணியை ஆய்வு செய்தபோது அங்கிருந்த ரூ.1.08 லட்சம் மதிப்புள்ள 240 பேட்டரிகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்ததாம். இதுகுறித்து சீனிவாசன் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
   அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் தொழில்நுட்பனர்களான நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜதுரை (23), அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் வசந்த் (22), மனோகர் மகன் ஆனந்த் (23) ஆகியோர் பேட்டரிகளை திருடியது தெரியவந்ததாம். இதனையடுத்து 3 பேரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து பேட்டரிகளை மீட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai