சுடச்சுட

  

  மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
   நல்லூர் வட்டார காங்கிரஸ் சார்பில் நல்லூரில் நடைபெற்ற விழாவுக்கு வட்டாரத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
   மேலும், பெண்ணாடம் முக்குளத்தில் உள்ள வள்ளலார் அறநிலையத்தில் தங்கியிருக்கும் முதியோர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு, இனிப்புகள் வழக்கப்பட்டன.
   நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ராஜாசிதம்பரம், ஐஎன்டியூசி நிர்வாகி அழகேசன், மாவட்டச் செயலர் முருகன்குடி ரங்கநாதன், பேச்சாளர் அம்மாபெரியசாமி, வட்டார பொதுச் செயலர் பொன்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   நெய்வேலி: சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நெய்வேலி நகரிய காங்கிரஸ் கட்சியினர், 19ஆவது வட்டத்தில் உள்ள டேனிஷ் மிஷன் பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை காலை உணவு வழங்கினர். நகரத் தலைவர் குள்ளப்பிள்ளை தலைமை வகித்தார்.
   ஐஎன்டியூசி தலைவர் சுகுமார், பொதுச்செயலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினர். மாவட்டச் செயலர் பாஸ்கர், நகரச் செயலர்கள் இளங்கோவன், நாராயணசாமி, மரியந்துவான், தர்மராஜ், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு வட்டாரங்கள், நகரங்களிலும் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai