சுடச்சுட

  

  ஜெயலலிதாவுக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி

  By கடலூர்/சிதம்பரம்,  |   Published on : 10th December 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
   அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வராக செயல்பட்டவருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
   விடுமுறை முடிந்து வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
   இதனையடுத்து மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி ஆசியர்கள், மாணவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
   சிதம்பரம்: ஜெயலலிதா மறைவையொட்டி சிதம்பரம் காமராஜ் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் நினைவஞ்சலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளரும், முன்னாள் எம்எல்சியுமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார்.
   கூட்டத்தில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார். பின்னர் ஆசிரியர்கள் மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
   நினைவஞ்சலி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலர் டேங்க்.ஆர்.சண்முகம், ஒன்றியச் செயலர் அசோகன், அவைத் தலைவர் ராசாங்கம், பள்ளி முதல்வர் ஜி.சக்தி, துணை முதல்வர் ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai