சுடச்சுட

    

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
     கடலூர் மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு தொழிலாளர் அலுவலர் கோ.ராமு தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர்கள் கே.சுரேஷ், எம்.விஜி, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் என்.விஜயகுமார், தொமுச மாவட்டச் செயலர் எத்திராஜ் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
     அம்பேத்கர் இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தவர் ஜெயலலிதா. மக்களின் மனதில் இடம் பிடித்த அவருக்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai