சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில் மூன்றாவது சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் "உயிர் தொழில்நுட்பத் துறை, வேதிப் பொறியியல் துறைகளின் சவால்கள்' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மாநாடு ஆகியவை அண்மையில் 2 நாள்கள் நடைபெற்றன.
   தொடக்க விழாவில் வேதிப் பொறியியல் துறைத் தலைவர் வீ.விஜயகோபால் வரவேற்றார். பல்கலைக்கழக நிதி செலவினம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு செயலர் இ.செல்வராஜ் தலைமை வகித்தார்.
   அவர் பேசுகையில், ஆராய்ச்சி மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்கான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
   பஞ்சாப் மாநில உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய விஞ்ஞானி அசோக்பாண்டே கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். ஹைதராபாத் சாய் லைஃப் சயின்ஸ் நிறுவன துணைத் தலைவர் ஏ.வசந்த்முருகேஷ் பங்கேற்று மருந்து தொழில்நுட்பம் மற்றும் அதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.
   இந்தோனேஷியா நாட்டின் பட்ஜட்ராஜன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மேட்ஜெனி, முனைவர் கமீலியா பனாடாராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். பள்ளி மாணவி ச.மு.சாம்பவி, லண்டன் இளம் விஞ்ஞானிகளின் நூல் பற்றியும், மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசுரிப்பதன் அவசியம் குறித்தும் பேசினார்.
   அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியர்கள் பா.முல்லை, ஆர்.சரவணன், எம்.தேன்மொழி, கே.திருமாவளவன், கே.மணிகண்டன், எஸ்.அறிவுக்கரசன் ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆர்.சரவணன் நன்றி கூறினார்.
   சர்வதேசக் கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சீனா, இந்தோனேஷியா, எத்தியோபியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் 60 பேராசிரியர்கள் பங்கேற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதித்தனர்.
   மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 30 பேர் பங்கேற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai