சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
     விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர்காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வீரவேல் (22). இவர் வெள்ளிக்கிழமை மாத்தூரைச் சேர்ந்த தனது சகோதரியின் மகன் ப.சுதீஷ் (4), அதே பகுதியைச் சேர்ந்த சி.முருகேசன் (50) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம்-சேலம் சாலையில் மணலூர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சுதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     வீரவேல், முருகேசன் இருவரும் காயமுற்றனர். சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
     விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநர் புதுக்கூரப்பேட்டையைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் அஸ்டின் (28) என்பவரை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai