சுடச்சுட

  

  நல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக மற்றும் வேப்பூர் பகுதி மக்கள் சார்பில், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் மௌன ஊர்வலம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  ஒன்றியச் செயலர் பச்சமுத்து தலைமையில் தொடங்கிய ஊர்வலம்,
  நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்பினரும் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்: சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ்.ரங்கசாமி, மாவட்டத் தலைவர் சி.மச்சேந்திரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், சத்துணவுத் திட்டத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்தும், சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய மாற்றங்களையும், ஓய்வூதியத்தையும் வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம்: இச் சங்கம் சார்பில், மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சி.குழந்தைவேலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன், நிர்வாகிகள் எஸ்.கருணாகரன், கோ.ஆதவன், ஆர்.ராஜேந்திரன், தனுசு, பொருளர் வி.சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு ஓய்வூதியர்களுக்கு
  வழங்கிய சலுகைகள் குறித்து மாநிலச் செயலர் டி.புருஷோத்தமன் பேசினார்.
  அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனம்:
  அமைப்பின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் பணியாளர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தவர்; அரசியல்வாதி என்ற வகையில் தனிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
  குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு: கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூரில் ஆட்சியரது பழைய அலுவலகம் அருகே சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவர் டி.பி.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்பினரும்
  பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பொதுச் செயலர் மு.மருதவாணன்
  உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai