சுடச்சுட

  

  திட்டக்குடி அருகே ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் பொருள்களின் எடையளவில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி அப்பகுதியினர் சனிக்கிழமை கடையை முற்றுகையிட்டனர்.
  திட்டக்குடியை அடுத்துள்ள கொரக்கை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை மூலம் வழங்கப்படும் அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக எடை குறைவாக விநியோகிக்கப்படுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
  குறிப்பாக எலெக்ட்ரானிக் எடை இயந்திரத்தில் முறைகேடு செய்து எடையைக் குறைத்து வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் தரமான அரிசி கடைக்கு வந்தால் அதனை வெளிச் சந்தையில் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி சனிக்கிழமை அந்த ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து கடையை ஊழியர்கள் மூடினர். அப்போது பொதுமக்கள், ரேஷன்கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai