சுடச்சுட

  

  சாலைகளில் அனுமதியின்றி தோண்டப்படும் பள்ளங்களால் இடையூறு ஏற்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  கடலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம், தொலைபேசி இணைப்புகள், குடிநீர்த் திட்டப் பணிகள் மற்றும் தனியார் பணிகளுக்காக சாலைகள் சேதப்படுத்தப்படுகின்றன.
  புதிய சாலைகள் அமைக்கப்பட்ட சில வாரங்களில் சாலைகள் சேதப்படுத்தப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அதன் பிறகு சாலைகள் செப்பணிடப்படாமல் மேலும் சேதமடைகின்றன.
  தற்போது மழைக் காலத்திலும் கடலூரின் பல்வேறு பகுதிகளில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. இதனால், மழைநீர் வடிந்தோட முடியாமல் சாலையில் தேங்குகின்றன.
  இதுதொடர்பாக கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் மு.மருதவாணன் கூறுகையில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்காக கடலூர்-நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
  மழைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பற்றி கவலைப்படாமல் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதனால் மழைநீர் வழிந்தோட வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்குகிறது.
  எனவே மாவட்டத்தில் அரசின் சட்டப்பூர்வமான உத்தரவைப் பெற்ற பிறகே பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டத்துக்கான பேரிடர் தடுப்பு சிறப்பு கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai